search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக எம்எல்ஏ"

    மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்த திமுக கொறடா சக்கரபாணியின் பணப்பை திருட்டுபோனதையடுத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #DMK #Sakkarapani
    சென்னை:

    மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்த திமுக கொறடா சக்கரபாணியின் பணப்பை திருட்டு போனது.



    தனது பையில் ரூ.1 லட்சம் ரொக்கம், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை இருந்ததாக சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.  #DMK #Sakkarapani

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் குறைவாக உள்ளதை கண்டித்து நோயாளிகளுடன் இணைந்து தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்டார்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அங்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். இன்று மருத்துவமனை பணியில் ஒரு டாக்டர் மட்டும் இருந்துள்ளார். இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து தினமும் இது போல் டாக்டர்கள் குறைவாக உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் பென்னாகரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்ப சேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தார்.

    அப்போது பணியில் டாக்டர் ஒருவர் மட்டுமே இருந்ததால் நோயாளிகளுடன் மருத்துவமனையின் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூரில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Hydrocarbon #DMK
    திருவாரூர்:

    நாடு முழுவதும் 55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நாகை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 1-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் டெல்லியில் நடந்தது.

    தமிழகத்தை பொறுத்தவரை 3 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் இன்று (3-ந்தேதி ) திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன், நாகை மாவட்ட செயலாளர் கவுதமன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், திருவிடைமருதூர் கோவி.செழியன் மற்றும் தஞ்சை நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் எரிவாயு, எண்ணை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திக்கூடாது என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் இன்று பிற்பகலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், திருவாரூக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.

    மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

    அதன்படி திருவாரூருக்கு வரும் வழியில் கவர்னருக்கு பிற்பகலில் விளமல் கிராமம் பகுதியில் கருப்பு கொடி காட்டப்பட உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

    கவர்னர் வருகையையொட்டி திருவாரூர் செல்லும் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Hydrocarbon #DMK
    13 மாதங்களுக்கு பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் நிலுவையிலிருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் சம்பளம் கிடைத்ததுள்ளது. #DMK

    சென்னை:

    தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்ற ஆண்டு மாத சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தி 1 லட்சத்து 5 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டது.

    இதை பல கட்சிகள் விமர்சித்தன.

    சம்பளம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர்.

    இதை காரணம் காட்டி, தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு புதிய சம்பளம் வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதை அடுத்து கடந்த 13 மாதங்களாக பழைய சம்பளமான 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வாங்கி வந்தனர்.

    அதே நேரத்தில் புதிய சம்பளத்தை வாங்க அனுமதிக்கும் படி ஸ்டாலினிடம் துரைமுருகன் மூலம் எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தி வந்தனர்.

    இதையடுத்து எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் புதிய சம்பளத்தை வழங்கும் படி சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.

    தி.மு.க தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களே சம்பளம் வாங்குகிறோம். நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டதால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதிய சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளோம் என்று கடிதத்தில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதத்தின் அடிப்படை யில் தி.மு.க எம்.எல்.ஏ.க் களுக்கு புதிய சம்பளம் வழங்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ க்கள் 89 பேருக்கும் 1.7 2017 முதல் கணக்கிட்டு 13 மாத நிலுவைத் தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

    தி.மு.க தலைவர் கருணாநிதி மரணமடைந்த நாள் வரை (ஆகஸ்ட் 7-2018) கணக்கிட்டு அவருடைய வங்கிக் கணக்கிலும் 6 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதனுடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாதாள சாக்கடை திட்டம் குறித்து எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது ரங்கநாதன் எம்.எல்.ஏ. (தி.மு.க.) துணை கேள்வி கேட்கும்போது, “கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் என்று அமைச்சர் அடிக்கடி கூறுவதாகவும் கடந்த ஆட்சி என்றால் அதுவும் அ.தி.மு.க. ஆட்சிதான். 2011-ல் இருந்து 7 ஆண்டுகளாக உங்கள் ஆட்சி நடப்பதாகவும்“ குறிப்பிட்டார்.

    அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் ரங்கநாதனை பார்த்து குரல் எழுப்பினார். உடனே ரங்கநாதன் அந்த எம்.எல்ஏ.வை பார்த்து, “நீங்கள் இப்படி பேசினால் நானும் அதேபோல் பேச தயார்” என்று சவால் விடுத்தார்.

    இருவருக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க சபாநாயகர் தலையிட்டார். “எதுவாக இருந்தாலும் என்னை பார்த்து பேசுங்கள்” என்றார்.

    அதற்கு ரங்கநாதன் எம்.எல்.ஏ., “நான் உங்களை பார்த்துதான் பேசுகிறேன். ஆனால் நீங்கள் எங்களுக்காக பரிந்து பேசுவதில்லை. அந்த எம்.எல்.ஏ. என்னை பார்த்து கேட்டதால் நான் திருப்பி கேட்டேன்” என்றார்.

    உடனே சபாநாயகர் கூறும் போது, “நீங்கள் அதைப் பற்றி பொருட்படுத்தாமல் என்னை பார்த்து பேசுங்கள். நான் அவர்களை அமைதிப்படுத்துகிறேன்” என்றார்.
    ×